இந்தியர்களை மீட்க 4 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம் என தகவல்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள அண்டை நாடுகள் வழியாக  இந்தியர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைக்க ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் (ஓய்வு) விகே சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு ஒன்றிய அமைச்சர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.