மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி

தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி. இந்த மாதத்தில், காலைப் பனிக் குளிர் உண்டு. என்றாலும், பக்தியால் அதை விரட்டி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி பரவசப்படும் பக்தர்களும் கோவில்களில் உண்டு.

மார்கழி மாதத்தில், திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜரை வழிபட்டால், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் கிடைக்கும் என, காரண ஆகமம் கூறுகிறது.ஆனந்தம் ஆடாங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம், ஆனந்தக் கூத்து என, திருமூலர் ஆனந்த தாண்டவத்தைப் போற்றுகிறார்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில், ஆடல்வல்லானை வழிபட்டு, வாழ்வில் ஆனந்தம் அடைவோம்