கபாலீசுவரர் ஆலயத்தில் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம், புனிதநீர் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு…

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அமைச்சர் சேகர்பாபு அங்கு சென்று ஆய்வு செய்தார். கபாலீசுவரர் கோவில் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புனித தீர்த்தம் வரவழைக்கப்பட்டு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அரங்கத்துக்குள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. வாகனங்களை நான்கு மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.