துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த பரிதாபம் !!!!
ஆம்பூர் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் மற்றும் கணவன் இறந்த துக்கத்திலிருந்து மீளாத பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முருகன் மலைகோவில் குளத்தில் குளிக்கச் சென்ற போது அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து எதிர்பாராதவிதமாக தந்தையின் கண்முன்னே குழந்தைகள் ஜஸ்வந்த் மற்றும் ஹரிபிரீத்தா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் இறந்த துக்கத்தில் மறுநாளே விஷம் குடித்தனர். இதில் லோகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது மனைவி மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்பு உயிர் பிழைத்து கைலாசகிரி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த துக்கத்தில் தாய் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி நேற்று மாலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.