ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு-விரைவில் விசாரணைக்குழு
ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புறநகர் பகுதிகளுக்கும் குடிநீர், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சி நிதி சுமை காரணமாக நிரப்பப்படாமல் இருக்கும் காலி பணியிடங்கள் முதல்வரின் அனுமதி பெற்று நிரப்பப்படும் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது புதிதாக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் காலதாமதமின்றி விசாரணை விரைவாக நடத்தப்படும் என்றும் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.