புழல் சிறையில் ஜெயக்குமாருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நள்ளிரவில் ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் ஜெயக்குமாரை சந்தித்துப் பேசினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்