ஆதரவற்ற குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்!!!
புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜித் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வலிமை ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. புதுவையில் வெற்றி நடைபோடும் வலிமை. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இதுவரை 150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் இதுவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மட்டுமே அவர்கள் வழங்கி வந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஒரு ஷோவுக்கான மொத்த செலவையும் ஏற்று குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.