உக்கிரமடையும் உக்ரைன் போர்!!!
உக்ரைன் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்து வருவதால், அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு, “ஆப்பரேஷன் கங்கா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியர்களுக்காக பிரத்யேக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.