உக்ரைனில் தவிக்கும் வேலூர் இளைஞர் – அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு!!!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பத்தூர் கிராமத்தை சக்திவேல் என்ற இளைஞர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார். உக்ரைனில் போர் குறித்து தொலைக்காட்சிகளில் செய்தியை பார்த்து அறிந்த அவரது தாயார் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. நேற்று திடீரென மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.