ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிக்ளகொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி வரும் 7-ந் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிட்னி நகரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிட்னி நகரம் அமைந்துள்ள மாநிலத்தை ஒட்டியுள்ள மற்ற மாநிலங்கள் சிட்னியில் இருந்து வரும் நபர்கள் 14 நாடகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன.

இதனால் 3-வது போட்டி சிட்னியில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் போட்டி அட்டவணைப்படி 3-வது போட்டி சிட்னியில்தான் நடைபெறும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மாநில அரசிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

K.N. ஆரிப்
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.