புரோ கபடி லீக்: தொடரின் சிறந்த ரைடர் விருதை வென்றார் பவன் சேராவத்!

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் நேற்று  நடைபெற்றது. 

இறுதி போட்டியில் டெல்லி மற்றும் பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதியில் டெல்லி அணி 37-36 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்த நிலையில் இந்த தொடரின் சிறந்த ரைடர் விருதை  பெங்களூரு வீரர் பவன் சேராவத் தட்டிச்சென்றுள்ளார். இந்த தொடரில் அதிகபட்சமாக அவர் 304 புள்ளிகளை குவித்துள்ளார். இந்த தொடரின் சிறந்த டிவென்டர் விருதை ஈரான் வீரர் முகமதுட்ரேசா சியானே பெற்றுள்ளார்.இந்த தொடரில் மட்டும் அவர் 89 புள்ளிகளை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொடரின் மதிப்புமிக்க வீரர் விருது டெல்லி அணியின் நவீன்குமாருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.