இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடக்கம்!!!

பின்னலாடை தொழில் வளர்ச்சியால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநில தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூர் நோக்கி வருகின்றனர். பின்னலாடை தொழில் சார்ந்து மட்டும் திருப்பூரில் 8 லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழிலாளர் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட பூண்டி ரிங் ரோட்டில் இந்து அறநிலையத்துறையிடமிருந்து, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு 2012-ல் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது.  

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.