சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: ஏழு பேர் பலி!!!
ஜகார்தா:இந்தோனேஷியாவில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிய நாடான இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் சரிந்தன.
இடிபாடுகளில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம், கடலில் 12 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறியது. இந்தோனேஷியாவின் அண்டை நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.