உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள்… 16,000 பேர்!

புதுடில்லி : ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை சந்தித்து வரும் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து, அங்கிருந்து விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக, அதன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.