சோமனூரில் கடையடைப்பு போராட்டம்!!
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சோமனூரில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் சோமனூர், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், காரணம்பேட்டை, தெக்கலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவுடன் முழு அளவில் கடையடைப்பு நடைபெற்றது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.