12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவிப்பு:கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு உள்ளதால், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று மிதமான மழை பெய்யும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.