பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது!!
இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, மதக் கலவரத்தை துாண்ட முயன்றதாக, தடா ரஹீம், 52, கைது செய்யப்பட்டார். இவர் மதக்கலவரத்தை துாண்ட முயன்றுள்ளார். ‘இவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர், ஹிந்து அமைப்பினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.சென்னையைச் சேர்ந்தவர் தடா ரஹீம். இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகி. இவர், சமூகவலைதளத்தில், கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் அணிவதில் ஏற்பட்ட பிரச்னை குறித்து எழுதியுள்ளார். அதில், ‘ஹிஜாப் பிரச்னையுடன் தொடர்புபடுத்தி, காஞ்சி சங்கர மடத்தில் இருந்து, பூணுால் அறுக்கும் போராட்டம் நடத்துவோம்’ என, அறிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.