திமுகவின் வெற்றிக்குக் காரணம் என்ன??

நல்ல நிர்வாகம், ஒன்றிய அரசின் கொள்கை மீதான எதிர்ப்பு இரண்டிலும் திமுக திறம்படப் பணியாற்றியது இந்தத் தேர்தலில் வெற்றி கிடைப்பதற்கு முக்கியமான காரணம். வாக்குகளுக்கு அளிக்கும் பணம் மட்டுமே வாக்களிப்பவரின் முடிவைத் தீர்மானிப்பதில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது. மாநில அரசின் கடன், ஜிஎஸ்டியில் உரிய பங்கு வந்துசேராமை போன்றவற்றால் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பது போன்றவற்றைத் திமுகவால் செய்ய இயலாமல் இருக்கிறது. திமுகவினுள் முற்போக்கு, திராவிட, சமூகநீதி பேசுவோர், பழைய பெருச்சாளிகள், காரியவாதிகள், கொள்கையின்றி இருப்போர், ஊழல் செய்பவர்கள் என்று பல அணிகள் இருக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.