பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகள் பறிமுதல்!!!

தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி ரயில் நிலைய பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலைய பகுதியில் சந்தேகப்படும்படி ஆட்டோ ஒன்று நின்றுகொண்டிருந்தது. அட்டைப்பெட்டிகளில் மூட்டை மூடையாக தடைசெய்யப்பட்ட சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகார்கள், கடத்தலில் ஈடுபட்ட முஹம்மது ஹுசைன், மீராஷா மரைக்காயர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்