காவல் காத்த தெருநாய்க்கு கண்ணீர் அஞ்சலி!!!

கம்பம்மெட்டு அருகே தெருநாய் இறந்ததற்கு அப்பகுதி மக்கள் பிளக்ஸ் வைத்து அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம் ஜிம்மி இறந்தது.‘ஜிம்மிக்கு எங்கள் இதய அஞ்சலி’ என பிளக்ஸ் அடித்து அப்பகுதியில் ஆங்காங்கே வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் இறந்த நாயை முறையாக அடக்கம் செய்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.தேனி மாவட்டம், கம்பம்மெட்டு அருகே சாந்தன்பாறை தொட்டிக்கானம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் சிறு குட்டியாக வந்த தெருநாய் ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் ‘ஜிம்மி’ என பெயரிட்டு உணவளித்து வளர்த்து வந்தனர். இதனால் ஜிம்மி வேறு எங்கும் செல்லாமல் அப்பகுதியை காவல் காத்து வந்தது.‘ஜிம்மிக்கு எங்கள் இதய அஞ்சலி’ என பிளக்ஸ் அடித்து அப்பகுதியில் ஆங்காங்கே வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் இறந்த நாயை முறையாக அடக்கம் செய்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.