சைபர் போரை தொடங்கியது உக்ரைன்: ரஷ்ய ஊடக வலைதளப்பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்..!

கீவ்: ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போர் தொடங்கியது. உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா இன்று 2 நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இன்று காலை 3 மணியளவில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.

ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்தனர் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் ஆதரவு ரஷ்யாவுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக ரஷ்யாவின் ஃபெடரல் ஆன்டிமோனோபோலி சேவையை ‘Anonymous’ எனப்படும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வலைதளப்பக்கத்தை பல நாடுகளின் பயன்பாட்டர்களால் பயன்படுத்த இயலவில்லை. இதனையடுத்து ரஷ்ய ஊடகமான RT முடக்கப்படுவதாக அறிவித்தது.

மேலும் தாங்கள் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பகதாகவும் எனவே ரஷ்ய அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் ‘Anonymous‘ குழு அறிவித்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி காலை 9.30 மணியளவில் RT-ன் வலைதளப்பக்கத்தை ஹேக்கர் குழு முடக்கியது. ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்த வலைத்தளம் முடக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் RT மீட்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.