கணவர் சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்திய கவுன்சிலர்…

வட்ட தி.மு.க. செயலாளரான செல்வம் சமாதியில் கவுன்சிலர் சமீனா செல்வம் வெற்றி சான்றிதழை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.188-வது வட்ட தி.மு.க. செயலாளரான செல்வம் என்பவர் கடந்த 1-ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 188-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக இவரது மனைவி சமீனா செல்வம் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற சான்றிதழுடன் மடிப்பாக்கத்தில் உள்ள தனது கணவர் செல்வம் சமாதிக்கு தொண்டர்களுடன் சமீனா செல்வம் சென்றார். அங்கு வெற்றி சான்றிதழை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.