மகா சிவராத்திரி கலை நிகழ்ச்சிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்…
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று(1-ந்தேதி) சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். அறநிலையத்துறை வரலாற்றில் முதல்முறையாக மகா சிவராத்திரி அன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மிக கலைஞர்கள் இணைந்து வருகிற 1-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் (2-ந் தேதி) காலை 6 மணி வரை 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்