ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல் Citroën நிறுவனம்!

நூற்றாண்டை கடந்த பாரம்பரிய ஃப்ரெஞ்சு ஆட்டோமொபைல்
நிறுவனமான Citroën அடுத்த ஆண்டில் இந்தியாவில் தொடங்கவுள்ளது.

2021ம் ஆண்டில் Citroën நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க இருக்கிறது. அதன் மிட் சைஸ் எஸ்யூவி ரகமாக C5 Aircross மாடலை முதல் மாடலாக அந்நிறுவனம் களமிறக்க உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் கால் பகுதியில் இந்த அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர Citroën நிறுவனம் ஆயத்தமாகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.

இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பாக்ட் எஸ்யூவியாக இருக்கும் என தெரிகிறது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் என இரண்டு இஞ்சின் ஆப்ஷன்களில் இந்த மாடல் வெளிவரும்.

Citroën-ன் CMP பிளாட்ஃபார்மில் இந்த மாடல் தயாரிக்கப்பட்டிருக்கும்.

இது கனெக்டட் காராக வெளிவரும்.

எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 7 லட்ச ரூபாயாக இதன் தொடக்க விலை இருக்கும்.

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, நிசான் மேக்னைட், டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் குரூஸர், கியா சோனட் போன்ற மாடல்களுக்கு Citroën-ன் புதிய கார் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

K.N. அப்துல் ரசாக்
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.