போக்குவரத்து துறை வசூல் வேட்டை! !!
போக்குவரத்து ஆணையரிடம் புகார் மனு கொடுத்த கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள். எழிலகத்தில் லாரி ஓட்டுனர்கள் கொடுத்த புகார் மனு.கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் மன வேதனை. அப்போது செய்தியாளர்களிடம் கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பேட்டி அளிக்கும் போது, லாரியில் ஒட்டப்படுகிற ஸ்டிக்கர் 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்கிறார்கள். இந்தத் தொகை மிகவும் அதிகமாக உள்ளது எனவும் FC ஃபீஸை விட ஸ்டிக்கர் ஃபீஸ் அதிகமாக உள்ளது என்றும் இது சம்பந்தமாக ஆர்டிஓ-விடம் கேட்டால் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவிக்கிறார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.