எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா!!!
திரிபலா என்பது இந்திய பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் தலைமையானது. .நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப் பொருள்தான் ‘திரிபலா. வயிற்றில் பூச்சிகள் வளர்வதை தடுக்கும். அதோடு வயிற்றிலுள்ள புழுக்களை வெளியேற்றவும் உதவும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மலச்சிக்கலைத் தீர்க்க பெரிதும் உதவுகிறது.தான்றிக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. திரிபலா பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக அரைத்துக் கொள்ளலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.