பாலாற்று மேம்பாலத்தில்போக்குவரத்துக்கு அனுமதி…
பராமரிப்பு பணி நடைபெற்ற மேம்பாலத்தில் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது. நேற்று மாலை சீரமைப்பு பணி நடந்த பாலத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே பாலாற்றின் மீது இரண்டு மேம்பாலங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த பாலங்கள் சேதம் அடைந்தன.இன்று மாலை அந்த பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக சென்னை – திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இயக்கப்பட உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.