நயன்தாரா நட்பில் நெகிழ்ந்த சமந்தா

நயன்தாராவுடன் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நயன்தாரா தென்னிந்திய திரையுலக கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். எத்தனையோ புதுப்புது நடிகைகள் வந்தும் அவரது மார்க்கெட் சரியவில்லை. இதற்காக சக நடிகைகள் சிலருக்கு நயன்தாரா மீது பொறாமை உண்டு என்று கூறுகின்றனர்.

இதுபோல் சமந்தாவும் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னனி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார். கணவரை விவாகரத்து செய்த பிறகு தோழிகளுடன் ஜாலியாக கடல் மற்றும் மலைப்பகுதிகளில் சுற்றி வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நயன்தாராவும், சமந்தாவும் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
படப்பிடிப்பில் இருவரும் பழகி நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர். தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளிவந்தன.
இந்நிலையில் நயன்தாராவுடன் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் எங்களின் சிறப்பான நட்பு என்ற பதிவையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். நயன்தாரா சமூக வலைத்தளத்தில் இல்லை. ஆனாலும் அவரது அன்பை அனுப்புகிறார் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.