20,000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் கதி என்ன…? பாதி வழியிலேயே விமானம் திரும்பியது மீட்பதில் சிக்கல்.!

போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷிய படைகளில் உக்ரைஅனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
ரஷியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டதால், இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து, தொடர்ந்து விசாரித்து வருவதாக, மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கதி என்ன.? – என்பது குறித்து அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்திய வீரர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் குண்டு வீச்சு காரணமாக  திரும்பி வந்து உள்ளது . இதனால் இந்தியர்களின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்  கூறியதாவது:-
ரஷியாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது; உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷிய அதிபர் புதின், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும்  தற்போதைய நிலை குறித்து உக்ரைன் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி பேசி அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.