ஐ.நா. அவசரகால கூட்டத்தில் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் காரசார வாக்குவாதம்

ரஷ்ய அதிபர் போர் அறிவித்ததற்கான குரல் பதிவு உள்ளது என உக்ரைன் பிரதிநிதி ஐ.நா. அவசரகால கூட்டத்தில் கூறியுள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.