உக்ரைனில் விமான நிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிரம்
போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலையும் 100 அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததற்கான அறிகுறியாக, கீவ் நகரில் வெடிகுண்டு சத்தம் ஒன்றும் கேட்டுள்ளது. இதன்படி, மரியுபோல் என்ற கிழக்கு துறைமுக நகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.