ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த சம்பவம்!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திய மூவரை கைது செய்தனர். ஒரு சில நியாய விலைக் கடைகளில் அரிசி, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குடும்ப அட்டைதாரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.