உக்ரைன் அருகே ராணுவம், மருத்துவமனை.. தயாராக இருக்கும் ரஷ்யா: காட்டிக்கொடுத்த சாட்டிலைட் புகைப்படங்கள்

உக்ரைன் எல்லை அருகே ராணுவ வாகனங்கள், படைகள் ஆகியவற்றை ரஷ்யா குவித்துள்ளதோடு, ராணுவ மருத்துவமனையையும் அமைத்துள்ளது தொடர்பான சாட்டிலைட் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.  தற்போது மீண்டும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்து வருகிறது.  தனது ராணுவத்தின் ஒருபகுதியை முகாம்களுக்கு திரும்ப அழைத்துகொண்டதாக ரஷ்யா கூறினாலும், உக்ரைன் எல்லையில் பல லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக் ஆகிய கிளர்ச்சியாளர்களால் ஆளும் பகுதிகளை சுதந்தரம் பெற்ற பகுதிகளை ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் அறிவித்தார். உக்ரைனின் உள்விவகாரங்களில் ரஷ்யா தலையிட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.