அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி!!!

கோவை காந்திபுரம் பகுதியில் வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம். திரையரங்கில் 5 மணிக்கு காட்சி துவங்கியதும் ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள ரசிகர்கள் அடுத்த காட்சிக்காக காந்திருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், தியேட்டர் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் சிலருக்கு லேசான காயம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.