கடலூர் புவனகிரியில் மறுவாக்குப்பதிவு விறுவிறு!!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 4வது வார்டு திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 4ல் மட்டும் பிப்.24ல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.