ஒரு குடும்பத்தில் 5 பேரும் தோல்வி!!!

 கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் தோல்வியடைந்தனர். அ.தி.மு.க.,வில் சீட் கொடுத்தும், கோட்டக்குப்பம் முன்னாள் தலைவர் அப்துல் அமீது, தனது குடும்ப உறுப்பினர்களுடன் 5 வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்டார்.காரணம், சுயேச்சையாக போட்டியிட்டால், தனது சமுதாயத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஓட்டுகளை பெற்று விடலாம் என்ற கணக்கில் குடும்ப உறுப்பினர்களுடன் தேர்தல் களத்தில் இறங்கினார்.15வது வார்டில் அப்துல் அமீது, அவரது மகள் ராபியத்துல் பசிரியா 20வது வார்டிலும், மருமகன் முபாரக் (எ) முகமது பாரூக் 22வது வார்டிலும், மகன் முகமது பாரூக் 25வது வார்டிலும், மருமகள் ஹத்திஜா பீவி, 27வது வார்டிலும் போட்டியிட்டனர். இதில் அப்துல் அமீது உட்பட 5 சுயேச்சைகளும் தோல்வியடைந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.