காருக்குள் மதுபானம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மகன் திடீர் கைது
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி வகித்து வருகிறார். பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான் கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ள நிலையில்
இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களது காரில் மது இருந்துள்ளது.
மூஸா, பாகிஸ்தான் நாட்டு முதல் பெண்மணியான புஷ்ரா பீபியின் மகன். இம்ரான் கானை புஷ்ரா திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக தனது முன்னாள் கணவருடன் இணைந்து மூஸாவை பெற்றெடுத்தார். மூஸா கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு அதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் மது விற்பனை மற்றும் நுகர்வு சட்டவிரோதமானது ஆகும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.