ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி
உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க 27 ஐரோப் பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதில் ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை ஜெர்மனி நிறுத்தி உள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரி வாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.
ரஷ்யா மீது கனடா நாடும் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகளி லுடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ரஷிய வங்கிகளுடனான பரிவர்த்தனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.