ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடனான சந்திப்பு ரத்து – ஆன்டனி பிளிங்கன்

உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜெனீவாவில் ரஷ்யா வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.