உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்!

உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்ட அதிபர் புதினுக்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக அதிபர் புதின் நேற்று அறிவித்தார். அங்கு ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்டதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.