திமுக கனவை சிதைத்த அந்த ஒத்த ஓட்டு!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கல்பனா காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார். ஊத்தங்கரையில் திமுகவின் கனவை அதிமுக வேட்பாளர் கல்பனா சிதைத்துள்ளார். காரணம், ஊத்தங்கரை பேரூராட்சி 8-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கல்பனா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் மலர்விழியை விட கூடுதலாக ஒரு வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கல்பனா 273 வாக்குகளும், மலர்விழி 272 வாக்குகளும் பெற்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.