விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்…

இமாசலபிரதேசம் உனா மாவட்டம் தஹ்லிவால் தொழில்துறை பகுதியின் பத்ரி கிராமம் அருகில் உள்ள குர்பாலாவில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசுகளை பெட்டியில் வைத்து பேக் செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளரகள் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.