உத்தரகாண்ட்டில் பயங்கர விபத்து…

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள கன்காயின் தண்டா மற்றும் கட்டௌதி கிராமத்தைச் சேர்ந்த திருமண கோஷ்டி தனக்பூர் நகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டு தண்டா கக்னாய் கிராமத்திற்கு நேற்று இரவு 10 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுகிதாங்- டண்டமினார்  சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.