டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாளை நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை 37 கி.மீ.மெஜந்தா பாதையில் (ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா மெட்ரோ நிலையம் வரை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், பயணத்திற்கான முழு செயல்பாட்டு தேசிய பொது இயக்கம் அட்டையையும் (என்.சி.எம்.சி) தொடங்கவுள்ளார் கூறப்படுகிறது. “ஒன் நேஷன் ஒன் கார்டு” என்று அழைக்கப்படும் என்.சி.எம்.சி என்பது ஒரு இயங்கக்கூடிய போக்குவரத்து அட்டையாகும். இது நாடு முழுவதும் மெட்ரோ மற்றும் பஸ் சேவைகளைப் பயன்படுத்துதல், சுங்கவரி, பார்க்கிங் மற்றும் சில்லறை ஷாப்பிங் மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல வகையான போக்குவரத்துக் கட்டணங்களை வைத்திருப்பவர்களுக்கு அனுமதிக்கிறது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.