கோவை மாநகராட்சி தேர்தல்..
வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு. கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகக் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்குச் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.பஜ்ரங்தள் தொண்டர் கொலை.. 3 பேரை கைது செய்த போலீஸ்.. கர்நாடகாவில் தணியுமா பதற்றம்? மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை நிரப்ப நடைபெற்ற இந்தத் தேர்தலில், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்சிறு பூசல்கள் நடந்த சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தச் சூழலில் இன்று மொத்தம் 268 வாக்கு எண்ணும் மையங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வழக்குசென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய மாநகராட்சியாகக் கருதப்படும் கோவையில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே கோவை மாநகராட்சியில் வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.பணப்பட்டுவாடாசென்னை உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் கோவையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் கோவை மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி பாகுபாடில்லாமல் அனைவரும் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்பொருட்களைக் கொடுத்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தடையில்லைமேலும், தேர்தல் ஆணையத்தில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள். இது தொடர்பாகப் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதேநேரம் கோவை மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடையில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.
…