மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு!

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு போன்ற பொருட்கள் மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொடர்பான தகவல்களை கூறியுள்ளார்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டோக்கன்-ல் குறிப்பிட்டுள்ளவாறு பகுதிவாரியாக பொங்கல் பரிசு ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வழங்கப்படும். மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ஆம் தேதியன்று பொங்கல் பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம்.

குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து பொதுமக்களும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். பொங்கல் பரிசினை பெறுவதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் பறக்கும் படை தாசில்தார் மற்றும் குடிமைபொருள் தனி தாசில்தார் அலுவலர்களை தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம். இல்லையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கும் சென்று டோக்கன்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

ரஹ்மான்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.