காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் !!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலாவதியான குளிர்பானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் இன்று புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை பகுதியில் உள்ள பின்னி மில் மைதானத்தில் உள்ள குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பல்வேறு கம்பெனிகளின் குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்தபோது அதில் ஆங்காங்கே காலாவதியான குளிர்பானங்களும் இருந்தன இதனையடுத்து அந்த குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு தறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.