ரஜினியின் 170 வது திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த – போனி கபூர்!!

நடிகர் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளியை வைக்கும் வகையில் போனி கபூர் சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் ரஜினி என்னுடைய நீண்ட நாள் நண்பராக இருந்து வருகிறார். வழக்கமாக சந்தித்து வருவதை விட சினிமா குறித்த கருத்துக்களை பரஸ்பரம் பகிந்து வருகிறோம். ஒருவேளை நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருப்பினும் அதனை நான் தான் முதலில் அறிவிப்பேன் , தற்போது கசிந்து பரவி வரும் தகவல்கள் போன்று எதுவும் உங்களுக்கு வராது . எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் பதிவிட்டு இருக்கிறார் போனி கபூர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.