சென்னை மாநகராட்சியில் குறைந்த ஓட்டுப்பதிவு எந்த கட்சிக்கு சாதகம்?
வடசென்னையை பொறுத்தவரை சராசரியாக 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுப்பதிவாகி இருக்கிறது. மணலி மண்டலத்தில் உள்ள 17-வது வார்டில் மிக அதிக அளவில் அதாவது 84.58 சதவீதம் பதிவாகி இருக்கிறது. 200 வார்டுகளை கொண்ட பெருநகரமான சென்னை மேயர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. எனவே இந்த மாநகராட்சியை கைப்பற்றுவதில் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் போராடுவதில் ஆச்சரியம் கிடையாது. ஆனால் சென்னையின் வாக்குப்பதிவுதான் இந்த தேர்தலில் எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.