என்ன கேட்டாலும் உடன் பதில் சாதிக்கும் 2 வயது குழந்தை!!!
இந்த குழந்தை வித்தியாசமாய் விளையாடி அதனையே சாதனையாக்கி விட்டது.சிவகாசி கவிதா நகரை சேர்ந்த ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் , சத்யா தம்பதியினரின் ஒரு வயது 11 மாதங்கள் மட்டுமே ஆன குழந்தை ஆத்வி குமார்.இக்குழந்தை ஒரு வயது 7 மாதங்கள் இருந்தபோதே பல்வேறு நாட்டு கொடிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், வாகனங்களின் லோகோக்கள், இடங்களின் பெயர்கள், விலங்குகள், பறவைகள், உணவு பொருட்கள் என பெயர்களை சரியாக கூறியதால் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.